மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனைவாரி ஓடையில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளி உள்ளனர். அதன்பிறகு மணல் கடத்தப்பட்ட மினி லாரியோடு, சிலர் கடை வீதியில் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் மணல் கடத்தியவர்கள் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களில் ஒருவரை மட்டும் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தில் […]
