Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]
