தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் (30ஆம் தேதி) நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த், காவல் துறையினர் […]
