நடிகர் கதிர் நடித்துள்ள ஜடா படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. பரியேரும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் தனி இடத்தையும் பிடித்துள்ள நடிகர் கதிர். நல்ல கதையும் கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தற்போது அறிமுக இயக்குநாரான குமரன் இயக்கத்தில் ஜடா என்னும் படத்தில் நடித்துள்ளார். ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் கால்பந்தாட்ட போட்டிகளில் நடக்கும் கதைகளம் அதைச்சுற்றி நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் கூறும் […]
