சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், […]
