லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வில்லியம் கவ்லி (william cawley) என்ற 23 வயது இளைஞன் பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார். […]
