கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் இருந்து இரும்புத்தூள் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனையடுத்து டேங்கர் லாரி சாலையோரமாக இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
