Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா…. மொபைல் விற்பனை… உலகளவில் கடும் வீழ்ச்சி….!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கவுன்டர் பாயிண்ட் என்ற தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 38 சதவிகித விற்பனை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அலைமோதிய கூட்டம்….. ரூ1,54,00,000….. கள்ளக்குறிச்சியில் பருத்தி விற்பனை அமோகம்…..!!

கள்ளக்குறிச்சியில் நேற்றைய தினம் வார சந்தையில் ரூபாய் ஒரு கோடியே 54 லட்சத்துக்கு பருத்தி விற்பனையாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பருத்தி விற்பனை நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற பருத்தி விற்பனையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் சுமார் 8086 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். என்றைக்கும் இல்லாத அளவிற்கு கூட்டம் நேற்றைய தினம் அலைமோதியது. அதில் ஒரு குவிண்டால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகள் விற்பனை – மூவர் கைது..!!

கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் ரோஜாக்கள்..!!

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சீரான சீதோச இதோ சில நிலை நிலவுவதால் திறந்த வெளியிலும் பசுமை குடில்களில், பல்லாயிரம் ஹெக்டேக்கர்களின் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.ஓசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி,காதலர்  தினங்களில் அதிக அளவிலான மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு காதலர் தினத்திற்காக சீனாவில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பூக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“தூங்கா நகரம்” 24 மணி நேர உணவு சேவை…. வேலைவாய்ப்பை பெருக்க மும்பை மாநில அரசின் சிறப்பு திட்டம்…!!

மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள்,  திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள்  விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும்,  சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா  நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும்,  கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கத்தரிகோலின் உதவியில் பைக் திருட்டு” 4 பேர் கைது…16 பைக் பறிமுதல்!!..

 அயனாவரத்தில்  கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம்  அடுத்த  நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர்  2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா  ஆகிய  இருவரிடம் விசாரணை நடத்தி  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை  ஆய்வு செய்ததில் அது போலி எண்  என்பது தெரிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 15,00,000 வரை விற்பனையான காங்கேயம் இன காளைகள்…!!

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. நத்தக்காடையூரில்  உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன கன்றுகள் ,காளைகள், மாடுகள் வாரம்  தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ப்பட்டு வருகிறது  . இந்த சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வளர்ப்போர்,காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், மயிலை பூச்சிகாளைகள், காராம்பசு ஆகிய […]

Categories

Tech |