கடந்த 4 மாதங்களாக சம்பளம் வாங்காமல் கண்காணிப்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் நுழையும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பொருட்டு அதிகாரிகள் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர். இந்த குழுவினருக்கு 6,750 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. […]
