வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்துக்குட்பட்ட கல்லேரிகுப்பம் மற்றும் ரோடு பரமநத்தம் ஆகிய பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு […]
