பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் […]
