தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்களின் பணிகளை முடிப்பதில் சற்று சிரமங்கள் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். இன்று உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். அதை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். கருத்து வேறுபாடு காரணமாக உங்களின் பிரியமானவர் உங்களின் மீது குற்றம் காண்பார்கள். நிதி வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்காது. […]