கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குளத்துபாளையம் சிவன் கோவில் வீதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் இறந்ததால் இவர்கள் தனது […]
