திரௌபதி திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் தற்போது ருத்ர தாண்டவம் எனும் படம் அக்டோபர் 1 வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக நிர்வாகியானஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “போதை வஸ்துக்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாடமாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதோடு கட்டாய மதமாற்றம் […]
