கோவா விமான ஓடுதளத்தில் நாய்கள் இருந்த காரணத்தினால் ஏர் இந்தியா விமானம் தரை இறங்க முடியாமல் கடைசி நேரத்தில் தடைபட்டது. கோவாவின் டபோலி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அதிகாலை 3 மணி அளவில் அந்த விமானம் தரையிறங்க இருந்த நிலையில் விமான ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமானி பார்த்துள்ளார். உடனடியாக விமானத்தை தரையிறக்குவதை நிறுத்திய விமானி வானத்திலேயே வட்டமடித்து கொண்டிருந்தார். இதையடுத்து ஓடுதளத்தில் நாய்கள் இருப்பதை விமான நிலைய அதிகாரிகளுக்கு […]
