அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். […]
