நாங்கள் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14-ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் நேற்று மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி, […]
