இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான தேர்வுகள் RRB, RRC மூலம் நடைபெறும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்களின் தகுதியை வைத்து பணியாளர்கள் தேர்வு நடத்தப்படும். மேலும் குறுக்கு வழியை நாடும் விண்ணப்பதாரர்களின் மீது சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னக ரயில்வே எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
