ஜாமீனில் வெளிவந்த இரண்டு ரவுடிகளை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ராஜேஷ் மற்றும் ஜான்சன் என்ற 2 ரவுடிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரும் மெரினா காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி […]
