நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]
