இந்தியாவிலுள்ள 100 வழித்தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியாருக்கு அடுத்த சில மாதங்களில் மத்திய அரசு விற்கவுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு அனைத்துச் சங்கங்களும் இன்று போராட்டம் நடத்திவரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை ஈவு […]
