இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்துள்ளது. 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்குகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க்கில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்தில் – நிக்கோல்ஸ் இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. […]
