எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]
