கல்குவாரி விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சோனா அன்சாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அங்கு ஏற்பட்ட பாறைச் […]
