அபாயகரமாக அந்தரத்தில் தொங்கும் பாறைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட பாதையாகும். இங்கு மழை காலத்தில் பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். இந்நிலையில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. […]
