துணை நடிகரான ரோபோ சங்கரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார் நடிகர் ரோபோ சங்கர். ஆனால் […]
