ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயாஸ்_க்கு 30 நாட்கள் பரோல் கோரிய மனு மீது நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் தமிழ் கோ நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். 29 வயதான தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றது. […]
