கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம், சாமி சிலை ஆகியவற்றை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆற்றங்கரை பகுதியில் வேம்பு மாரியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் வீரமணி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 31ம் தேதி இரவு சாமிக்கு பூசையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த 4 கிராம் […]
