இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை என்னும் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் சிசிடிவி கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வங்கியில் பணம் கொள்ளை போயிருக்கிறதா என காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் வங்கியின் அருகிலிருந்த நான்கு […]
