ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 பவுன் தங்க நகையை திருடித் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]
