திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் என்பத்துர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் வயது முதிர்வு காரணமாக திங்கள்கிழமை அன்று இறந்து போனார். இதனையடுத்து இவரை அடக்கம் செய்வதற்காக இவரது உறவினர்கள் காவிரிக்கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். செல்லும் வழியில் உள்ள மயான சாலை தனியாருக்கு சொந்தமானதாக இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த சாலையை கடக்கும் […]
