ஆற்றிற்கு குளிக்கச் சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூபதி என்பவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி பவானி ஆற்றிற்கு தனது அக்கா செல்வியுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போதும் துணி ஒன்று ஆற்றில் நழுவி சென்றுள்ளது. அதனை எடுக்க சென்ற நந்தினி எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான […]
