நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் பலோலோ நகர் அருகே பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் , கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பபுவா நியூ கினியா நாடும் ஒன்று ஆகும் .அதிஷ்டவசமாக சேதமேதும் ஏற்படவில்லை .
