அமெரிக்காவில் திருமணம் செய்த அடுத்த நிமிடமே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்த ஹார்லி மோர்கன் (19 வயது) தனது தோழியான பவுட் ரியாக்ஸை (20 வயது ) காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் திருமணம் செய்து கொண்டு, பின் அதற்குரிய பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். […]
