ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான பாடிஸ்டா அகுட் தனது தந்தை இறந்த காரணத்தினால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருப்பவர் ஸ்]பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர் பாடிஸ்டா அகுட். இவர் தற்போது நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று அகுட்டின் தந்தை ஜோவாகின் பாடிஸ்டா சாலை விபத்தில் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அகுட் தனது […]
