ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கா நகர்ப்பகுதியில் ஜமால் மொஹைதீன் என்ற ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வசித்து வருகிறார். இவர் வாழவந்தான் கோட்டைக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளார். இந்நிலையில் இவர் மன்னார்புரம் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரானது இவரின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]
