பெண்ணை மிரட்டிய குற்றத்திற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அன்னை தெரசா நகரில் சுப்புராஜ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரஞ்சித், ரகுராம் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சென்னையில் பணிபுரிந்து வந்த சுப்புராஜ் அங்கு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரது சிகிச்சைக்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான சாந்தாராஜ் என்பவரிடமிருந்து வனிதா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். […]
