கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி […]
