வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் தந்திருக்கிறது. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசுகளுக்கு கட்டாயமில்லை என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனால் இட ஒதுக்கீட்டை நம்பி இருக்கக்கூடிய பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சீராய்வு மனு […]
