ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. […]
