3 டன் 200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறு காவேரிப்பாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குற்றப்புலனாய்வு காவல்துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார், காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 […]
