நல்ல காரணங்களுக்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், “சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அடிப்படையில் நவீன இந்தியா இயங்கிவருகிறது. மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அடிப்படையில் மக்களால்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. குடியரசை […]
