நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம். சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு […]
