கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து நேற்று முன்தினமும் […]
