குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று குடி பழக்கத்தை நிறுத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் குடி பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தியதால் அவரும் அதனை கேட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் பூச்சி மருந்து […]
