பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]
