உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]
