இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
