நடிகர் அஜித் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதன் கோர தாண்டவம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்து வரும் சமயத்தில், பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டு இருந்தது. தற்போது அப்படி […]
