கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் யாவ் சே என்ற கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த யாவ் சேக்கு அவருடைய தாயார் அவரது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்து ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளார். ஆனால் யாவ் சேவின் ரத்த மாதிரியானது, அவரது தாயின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போகவில்லை. […]
